இந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) ?


இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக் கொண்டாடப்படுகின்றனர் ?, அவர்கள் இந்திராவைக் கொன்றிருக்காவிட்டால் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் சீக்கியருக்கெதிரான படுகொலைகள் நிகழ்ந்திருக்காது. அல்லது பொற்கோயிலில் இந்திய இராணுவத்தை ஏவி மிகப்பெரும் படுகொலைகளையும், சீக்கியரின் புனிதமாகக் கருதும் இடத்தை அழித்த இந்திராகாந்தியை கொன்றதால் கொண்டாடப்படுகிறார்களா என்றால் அதுதான் உண்மை. அவர்களிருவரும் பகத் சிங்கை விடவும் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்திரா காந்தி படுகொலையை அவர்கள் துன்பியல் நிகழ்வாகக் கருதவில்லை. அவர் கொல்லப்படுவார் என்பதை பஞ்சாப்பிய சீக்கியர்கள் உணர்ந்தே இருந்தனர். இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம்  வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.  இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History )  என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

                                       

அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது.  இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார். 

அமைதி நடவடிக்கை (Operation Shanti)

சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம். 

பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.

இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி)  என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்;

பின்குறிப்பு: சீக்கியர்கள் பற்றி எழுதிய இடுகைகள், படங்கள்  அனைத்திற்கும் உதவிய தகவல்களின் மூலத்திற்கான  இணைப்புகளை அங்கங்கே கொடுத்துள்ளேன். அவையனைத்திற்கும் நன்றிகள். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

13 கருத்துகள்:

  1. இந்திராவிற்கு சீக்கிய இனத்தின் மீது இவ்வளவு வன்மம் உருவாவதற்கு என அடிப்படை காரணம் என்ன?;

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி டி.சாய்

    இந்திரா காஷ்மீர் பண்டிட் பிராமணர். சீக்கியர்களின் குரு கோவிந்த் சிங் என்பவரிடம் கங்கு என்ற (கங்காதர் கௌல்) காஷ்மீர் பிராமணர் ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஒரு இடத்தில் சமையல்காரராக இருந்தார். பிராமணர்கள் மற்றவர்கள் சமைத்ததை உண்ண மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு உணவு தயாரிக்கவும், பிற தேவைகளுக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் குரு கோவிந்த் சிங்கின் மனைவியையும், இரண்டு மகன்களையும் முகலாயர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டார். பழிவாங்கும் விதமாக கங்குவும் அவரது மனைவியும் ஒரு சீக்கிய வீரரால் கொல்லப்பட்டனர். இந்த கங்குவின் பரம்பரையினர்தான் நேரு குடும்பத்தினர். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு சீக்கிய மதம் பார்ப்பனியத்தை அழித்துவிடும் என்று கருதியதால்தான் கங்கு செய்தது தவறில்லை என்று கருதியவர். பார்ப்பனியம் மற்ற மதங்களை வெறுத்தது போலவே சீக்கிய மதத்தையும் வெறுத்தது. நேருவே அப்படித்தான். இதன்படியே இந்திராவுக்கும் சீக்கியர் மீது வெறுப்பிருந்தது. அவரது பொற்கோயில் நடவடிக்கை கூட கங்குவின் சாவுக்குப் பழிவாங்கும் விதமானது என்றெல்லாம் சில சீக்கியர்கள் கருதுகின்றனர்.இதெல்லாம் சீக்கியர்களின் கருத்துப்படிதான்,ஆனால் ஏன் இறுதிவரையில் சீக்கியரையே தமது காவலுக்கு வைத்திருந்தார் என்பதும் தெரியவில்லை. இதல்லாமல் இந்திரா பாசிசவாத வெறிபிடித்தவர். இந்திராவை விமர்சிப்பவர்கள் அவரைக் "காளி" என்பார்கள். தனது வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னதும் சனநாயகத்தை தூக்கிவிட்டு அவசரநிலையைக் கொண்டுவந்தார். அவர் போட்ட ஆட்டத்துக்கு தமிழ்நாட்டிலேயே திமுகவினரால் அவரைக் கொல்லவும் முயற்சி நடந்தது.

    மேலும் அன்று பஞ்சாப்பின் பிரிவினைவாதத்தைக் காட்டி சீக்கியர்கள் மீது வெறுப்புணர்வு அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் வெறுக்கப்படுமளவிற்கு எனலாம். இனவிடுதலை போராட்டம் நடக்குமிடங்களில் அவை இனப்படுகொலைகளின் மூலமாகவே ஒடுக்கப்படும் என்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. அந்த வகையில்தான் இந்திராவின் செயலும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நன்றி சுரேஷ்குமார்

    பதிலளிநீக்கு
  5. நண்பரே! தமிழில் நான் பல நாட்களாய் தேடிய செய்தி

    பதிலளிநீக்கு
  6. நன்றி செங்குட்டுவன்

    பதிலளிநீக்கு
  7. I do not know how far this is true. the common knowledge on this is, Indira groomed Bindaran Wale. When he took Khalisthan seriously, he was attacked and got killed. The attack happened in the Gurudwara which is an absolute sacred place for Sikhs. this entry authorized by Indira is the cause of her being killed.
    This looks more logical to me.

    பதிலளிநீக்கு
  8. நன்றி பந்து ! இது ஆதாரமில்லாத தகவல்தான். சில சீக்கியர்கள் இதை நம்புகிறார்கள். நேரு குடும்பம் தம்மை பரம்பரை பரம்பரையாகவே பகைமை பாராட்டும் வகையில் இருப்பதாகக் கருதுகிறார்கள். சோனியா ராஜீவின் கொலைக்குப் பழிவாங்கவே ஈழப்போரை நடத்தினார் என்று கூறுபவர்கள் இருப்பதைப் போல இதை சீக்கியர்களும் நம்புகிறார்கள். தற்செயலாக இணையத்தில் கிடைத்த தகவல் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது. அதனால்தான்.

    பதிலளிநீக்கு
  9. முக்கியமான தகவல்கள். தமிழ் வினை கூறியுள்ளது சரியான தகவல்கள் அல்ல. இந்திரா படுகொலையில் முக்கிய காரணம் (தெரிந்தோ தெரியாமலோ) ஆர் கே தவான் தான் முக்கிய பங்காற்றினார். உளவுத்துறை கரடியாக கத்தியது. உள்வட்ட சீக்கிய வேலையாட்களை நீக்கச் சொல்லி. ஆர் கே தவான் இடம் கொடுத்த இடத்தினால் மட்டுமே அந்த இரண்டு பேரும் உள்ளே இருந்தனர். இது பெரிய சமாச்சாரம். நிறைய எழுத விசயங்கள் உள்ளது.

    இந்த பதிவை மீண்டும் ஒரு முறை வந்து படிக்க வேண்டும். முக்கியமான பதிவு இது.

    பதிலளிநீக்கு
  10. ஜோதிஜி இது சரியான தகவலா என்று கூட எனக்குத் தெரியாது. சீக்கியரின் மனநிலையைச் சொல்ல நினைத்தேன். நன்றி !

    நானும் இந்திரா கொலை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா16/2/16 9:32 PM

    this article is used as a platform to spread venomous anti-brahminical views...Nothing less than a nazi-like propaganda

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்